முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 118வது இடம் - டென் மார்க் முதலிடம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்:   உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 118வதுஇடம் கிடைத்தது.  உலகின் சிறந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த நாடு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. எஸ்.டி.எஸ்.என். என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியல் ஐக்கிய நாடுகள் ஏற்பாட்டின்படி 2016ம் ஆண்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 118வது இடம் கிடைத்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 117வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் கீழே இறங்கியுள்ளது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி, ஆயுட்காலம், சமூக ஆதரவு, மற்றும் வாழ்க்கையை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சி நிலை பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

2வது இடத்தை பெற்றுள்ள சுவிட்சர்லாந்தை தொடர்ந்து 3வது இடம் ஐஸ்லாந்துக்கும், நார்வேக்கு 4வது இடமும் பின்லாந்துக்கு 5வது இடமும் கிடைத்தன. மகிழ்ச்சி குறைந்து வரும் 10நாடுகளின் வரிசையில் இந்தியா, வெனிசுலா, சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், போட்ஸ்வானா ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.

சோமாலியா(76) சீனா(83) பாகிஸ்தான்(92) ஈரான்(105) பாலஸ்தீனம்(108) மற்றும் வங்கதேசம்(110) ஆகியநாடுகளுக்கு பின்னால் இந்தியாவின் நிலை இருக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 13வது இடத்திலும் ஆஸ்திரேலியா 9வது இடத்திலும் இஸ்ரேல் 11வது இடத்திலும் உள்ளன.

ஐ.நா.வின் உலக மகிழ்ச்சி தினம் இந்த மாதம் 20ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பங்களிப்பில் சமச்சீரற்ற நிலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இது வலியுறுத்துகிறது. மகிழ்ச்சி நிலை உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஒவ்வொரு விதமாக மாறுபட்டு இருப்பதை ஐ.நாவின் ஆய்வு அறிக்கை சுட்டி காட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்