கொழுப்புகளை கரைத்து உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுக்கும் எலுமிச்சை

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2016      வாழ்வியல் பூமி
lemon1

நமது நாட்டில் அனைத்து நல்ல காரியங்களிலும் முதல் இடம் பிடிக்கும் பழம் - எலுமிச்சம் பழம்.  உலகெங்கிலும் நிறைந்து காணப்படும் பழமாகும்.  இன்று 60 வகையான எலுமிச்சைகள் உள்ளன.  இவற்றில் நாம் பயன்படுத்துவது இரண்டு மட்டும் தான்.  ஒன்று நாட்டு எலுமிச்சை மற்றது கொடி எலுமிச்சை. இது நாரத்த மர வகையைச் சார்ந்தது.  இந்த பழத்திற்கு வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு பெயர்களும் உண்டு. தெலுங்கில் - நிம்மப்பண்டு, கேரளாவில் - எலுமிச்சை தேசிக்காய், வடநாட்டில் - நிம்பு, ஆங்கிலத்தில் - லெமன் என்றும் பெயர் உள்ளது. 

இந்தப்பழம் சமையல் வகை, வைத்திய முறை, மற்றும் சுப காரியங்களுக்கும் பயன்படுகிறது.  இதில் செம்புச்சத்து அதிகம் இருப்பதால் திருஷ்டி பரிகாரங்களுக்கும், மந்திர தந்திர காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். நமக்கு ஏற்படும் அநேக நோய்களை குணமாக்கும் நல்ல மருந்தாக எலுமிச்சை திகழ்கிறது.  மேலும் குறைந்த செலவில் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பழமாகவும், குறைந்த விலையில் நிறைய சத்துக்களுடன் கூடிய பழமாகவும் எலுமிச்சை உள்ளது. 

எலுமிச்சை சாறை குடித்தால் உடல் எடையை குறைக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது.  கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தனிக்க எலுமிச்சைக்கு தனிச்சிறப்பு உண்டு.
எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்:

எலுமிச்சை சாற்றை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.  ஏனெனில் இதில் உள்ள அமிலமானது (சிட்ரிக்), உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு நல்ல வடிவத்தை கொடுக்கும். எலுமிச்சையின் சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடலில் உள்ள வறட்சி நீங்கி, உடலின் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அளவிற்கு அதிகமாக பேதியானால் ஒரு எலுமிச்சம்பழச்சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் பேதி உடனே குணமாகும். பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிக அளவு குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ஓரு எலுமிச்சம் பழச்சாற்றில் அரை தேக்கரண்டி உப்பு கலந்து காலை எழுந்த உடன் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவந்தால் மலச்சிக்கல் நீங்கும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஓமத்தை சூடான நீரில் கலந்து குடித்துவர செரிமானப் பிரச்சினை மற்றும் வாயுப் பிரச்சினை குணமாகும். உடலில் உள்ள சோர்வு மற்றும் களைப்பை போக்க எலுமிச்சம் பழத்தை கடித்து சாற்றை சாப்பிட்டால் உடனே களைப்பை போக்கும். எலுமிச்சை சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.  இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் உடையது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது,  இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது. அரை எலுமிச்சை சாற்றுடன் ஒரு டம்ளர் பால் இல்லாத காபியில் கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வர தலைவலி குணமாகும். எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள் உள்ள இடங்களில் தடவ சரியாகும். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலமாகும்.

எலுமிச்சை சாற்றில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்து, இந்த கலவையை வெயிலில் காயவைத்து நன்றாக பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த பொடியை காலை மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீருடன் குடித்து வந்தால் பித்தம் குறையும்.  தேள் கொட்டியவுடன், எலுமிச்சம்பழத்தை நறுக்கி கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இவ்வாறாக தேய்த்தவுடன் விஷம் இறங்குவதோடு கடுப்பும் நின்று விடும். எலுமிச்சை சாறு மாதவிலக்கின்போது ஏற்படும் வலியை குறைக்கும்.  உடல் நமச்சலைப் போக்கும்.  தாதுவைக் கெட்டிப்படுத்தும். எலுமிச்சை சாறு தினமும் பருகினால் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும்.

நெஞ்சில் கபம் கட்டி இருமலில் கஷ்டப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, காலை மாலை இருவேளைகளும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் கபம் வெளியாகிவிடும். எலுமிச்சை சாறை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணத்தால் வரும் சிறுநீர் தொந்தரவு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் இருக்காது. எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு மற்றும் நீர்ச்சுருக்கு குணமாகும். எலுமிச்சம்பழ ரசத்தைச் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சனை தீரும். வெயில் காலங்களில் குழந்தைகள் நீர்ச்சுருக்கு ஏற்பட்டு அதிக அவதிப்படுவார்கள். அதுசமயம் எலுமிச்சை விதைகளை பசை போல அரைத்து, தொப்புலைச் சுற்றி தடவ வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினால் உடனே குணமாகும். 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: