முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      வேலூர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையட்டி ரூ. 2 கோடி செலவில் யாகசாலைக்கு பிரமாண்மான பந்தல் அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி கடந்த ஆண்டு ஜனவரி 26ந் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்பட்ட திருப்பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதமானது. அதைத் தொடர்ந்து பணிகள் விரிவுபடுத்தப்பட்டது. தொல்லியல் துறையின் வழிகட்டுதலோடு திருப்பணிகள் தற்போது முழுடையடையும் நிலையில் உள்ளது. பிரதான கோபுரங்கள், பிரகாரங்கள், கோவிலுக்குள் அமைந்துள்ள சன்னதிகள் ஆகியவை புதுபொலிவு பெற்றுள்ளன. வண்ணம் தீட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகிற பிப்ரவரி மாதத்தில் 3 தேதிகள் பொருத்தமாக இருக்கிறது. கோவில் சிவாச்சாரியார்கள் முடிவு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி ஆலோசனையின்பேரில் பிப்ரவரி 6ந் தேதி கும்பாபிஷேகம் நிறைவேற்ற கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்புதல் பெறப்பட்டது. எனவே கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கான பந்தல் முகூர்த்தம் கடந்த மாதம் 20ந் தேதி நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் திட்டமிட்டப்படி பிப்ரவரி 6ந் தேதி கும்பாபிஷேக நிறைவேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேதியை மாற்ற வேண்டுமாமமென இந்துசமய அறநிலையததுறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகதிற்கான யாக சாலை பூஜைகள் நடைபெறும். அம்மணிஅம்மன்கோபுரத்தையட்டி அமைந்துள்ள 5ம் பிரகாரத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. எளிதில் தீப்பற்றாத வகையில் இரும்பு தகடுகள் பயன்படுத்தி பந்தல் அமைக்கப்படுகிறது. கொடையாளர்கள் மூலம் ரூ. 2 கோடி செலவில் யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பந்தல் அமைக்கும் பணி முடிவடைநததும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்ககான தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்