வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மருத்துவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்பூசி பயிற்சி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      வேலூர்
1

 

வேலூர் மாவட்டம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு மாவட்ட அளவிலான தட்டம்மை மற்றும் ரூபெல்லா(ஆசு) நோய் தடுப்பூசி முனைப்பு இயக்கத்தின் சார்பாக பயிற்சி பட்டறை நடைபெற்றது. முன்னதாக கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் துணை இயக்குநர்களுக்கான தட்டம்மை மற்றும் ரூபெல்லா(ஆசு) நோய் தடுப்பூசி பயிற்சி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா (ஆசு) நோயினை தடுக்கும் விதத்தில் ரூ.1.7 கோடி குழந்தைகளுக்கும், இதில் வேலூர் மாவட்ட அளவில் ரூ.5.5 இலட்சம் குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள 47 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி உலக சுகாதார நிறுவன (றுர்ழு) துணை பிராந்திய குழுத் தலைவர் மரு.ராஜீவ்குமார் மற்றும் உலக சுகாதார நோய் கண்காணிப்பு அலுவலர் மரு.சுரேந்திரன் அவர்களால் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக 9 மாதம் முடிந்த 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா (ஆசு) தடுப்பூசி வழங்க வருகின்ற 2017 பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மருத்துவ முகாம்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.இந்த பயிற்சி பட்டறையில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.கே.எஸ்.டி.சுரேஷ், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மரு.செந்தாமரை, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் மரு.சங்கரானந்தி, உதவி திட்ட மேலாளர் மரு.ராஜேஷ், மாநகர நல அலுவலர் மரு.மணிவண்ணன் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: