முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.500, 1000 பணத்தை சிரமம் இன்றி கட்ட வசதிதலைவர் துரை குப்புசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      வேலூர்

அரக்கோணம்: வரிசையில் நிற்காமல் எவ்வளவு வேண்டுமானலும் ரூ500, 1000 பணத்தினை கட்டவாரங்கள் என நிர்வாக குழு கூட்டத்தில் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி அழைப்பு விடுத்து பேசினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் பல்வேறு கிளை அலுவலகங்களுடன் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் நிர்வாக குழுகக் கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் ஜெபி.பழனி முன்னிலை வகித்தார். தலைவர் துரைகுப்புசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசிய போது தற்போது 500, 1000 ரூபாய் கூட்டுறவு வங்கிகளிலும் டெபாசிட் செய்யலாம் என சொல்லப்பட்டு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டிய சிரமம் இல்லாமல் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி எவ்வளவு பணம் வேண்டுமானலும் சேமிப்பு கணக்கில் கட்டி கொள்ள வாருங்கள் என நிர்வாக குழுகக் கூட்டத்தில் அழைப்பு விடுத்து இவ்வாறு பேசினார்.\ பின்னர், உறுப்பினர்களின் கடன் மனுக்கள் மீது பரிசீலனை செய்வது, வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடங்;களை மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக நிரப்புவது என 19வகை தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வங்கி இயக்குனர்கள் என்.தனபால், ஏ.கிருஷ்ணமூர்த்தி, பவாணிகருனாகரன், சி.மோகன்ராம், ஜி.தனசேகரன், ஏ.சாந்தி, வனஜா, டி.காமேஷ், பி.பாபு, மற்றும் வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வங்கி மேலாண்மை இயக்குனரும், துணை பதிவாளருமான கே.முத்துராஜ் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago