Idhayam Matrimony

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

பவானி வர்ணபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 31) திருமணம் ஆகிவிட்டது. இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் 1½ ஆண்டு வேலை பார்த்து வந்தார்.அப்போது பவானி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடைக்கு வரும்போது அவருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். அப்போது மாணவிக்கு அவர் திருமண ஆசை காட்டி பழகி வந்தார்.இந்த நிலையில் கடந்த 01.12.2014 அன்று மாணவியிடம் விஜயன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோல் 03.12.2014 அன்று பள்ளி முடிந்து வந்த மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது

இரட்டை ஆயுள் தண்டனை

.இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விஜயனை போலீசார் கைது செய்தனர். மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயன் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பிரிவின் கீழ் தலா ரூ.100 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வக்கீல் சுமதி ஆஜர்ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago