முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாவட்டத்தில் 1294 பள்ளிகளிலும், 1697 அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் 1,57,846 பேருக்கு சத்தான கலவை சாதம் வழங்கப்படுகின்றது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு மாணவ மாணவியளர்களுக்கு வழங்கும் உணவுகளை பரிசோதித்தார். பின்னர் மாவட்ட கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

கலவை சாதம்

பள்ளிக்குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்யும் வகையில் 1982 ஆம் ஆண்டு சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்டது. சத்துணவுத் திட்டத்தில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதை மாற்றி சுவையான உணவினை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களில் பலவகை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம்  முதலமைச்சர் அவர்களால் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

          இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில், திங்கட்கிழமை தோறும் வெஜிடபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டையும், செவ்வாய்கிழமை தோறும் கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி மசாலா முட்டையும், புதன் கிழமை தோறும் தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டையும், வியாழக் கிழமை தோறும் சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையும், வெள்ளிக் கிழமை தோறும் கறிவேப்பிலை/கீரைசாதம் மற்றும் மசாலா முட்டை மசாலா, உருளைக்கிழங்கு பொறியலும் வழங்கப்படுகின்றது.  

 மசாலா முட்டை

மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில், திங்கட் கிழமை தோறும் பிசிபேளாபாத் மற்றும் வெங்காயம் தக்காளி மசாலா முட்டை மசாலாவும், செவ்வாய்கிழமை தோறும் மீல் மேக்கர் காய்கறிகள் சாதத்துடன் மிளகு முட்டையும், புதன்கிழமை தோறும் புளிசாதம் மற்றும் தக்காளி மசாலா முட்டையும், வியாழக்கிழமை தோறும் எலுமிச்சை சாதமும், சுண்டல் மற்றும் மசாலா முட்டையும், வெள்ளிக்கிழமை தோறும் சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொரியல் வழங்கப்படுகின்றது.

இதேபோன்று, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மூலம் செய்யப்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமான திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1294 சத்துணவு மைஙய்ஙகளில், துவக்கப்பள்ளிகள் 773, நடுநிலைப்பள்ளிகள் 269, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 244 மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் 9 என மொத்தம் 125653 குழந்தைகளுக்கு அனைத்துப்பள்ளி வேலைநாட்களிலும், மேலும் மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்களில் 32,193 குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றம் வியாழக்கிழமைகளில் மசாலா முட்டையுடன் கூடிய சத்தான பல்வகை கலவை சாதம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் தங்குதடையின்றி முழமையாக கல்வியைப் பெற்றிடவும், உடல் ஆரோக்கியத்தினை பாதுகாத்திடவும், மிகப்பயனள்ளதாக சத்துணவு திகழ்கிறது. மேலும் மாவட்டத்திலுள்ள சத்துணவு மையங்களில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையலறைகள், எரிவாயு அடுப்பு அமைக்கும் பணி, புதிய சமையல் பாத்திரங்கள் என பலவகைகளில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதுமான சமையலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற நல்ல திட்டங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்