எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள வேலூர்-அன்னப்பட்டி ஊராட்சியில் சமுதாயம் சார்ந்த அணுகுமுறை பயிற்சி ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்-அன்னப்பட்டி ஊராட்சி செயலர் (கிளர்க்) பி.முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் திறந்த வெளியில் மலம் கழித்தலினால் பரவும் நோய்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 5000 குழந்தைகள் நோய்வாய் பட்டு இறக்கின்றனர் என்று யுனிசெப் குழந்தைகள் நல அமைப்பு புள்ளி விபரம் அளிக்கின்றது. இதனால் திறந்த வெளியில் மலம் கழிக்கப்பட்ட ஊராட்சிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் மலேரியா, வாந்தி, பேதி மற்றும் வயிற்று போக்கினால் ஏராளமான குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று தூய்மை பாரத இயக்க ஒட்டன்சத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆ.இளங்கோவன் பேசினார். முன்மை பயிற்றுனர்கள் ஏ.கார்த்தீஸ்வரி, எம்.சாந்தி ஆகியோர் செயல்முறையாக “பீ” பரவாமல் தடுப்பது எப்படி என்பதை செயல்முறையாக செய்து காண்பித்தனர். இப்பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவர் இமாம் ஜாபர் , பணி மேற்பார்வையாளர் த.சகிலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் பணியாளர் கமலி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


