முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறுகிறது

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நீலகிரி

 

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் 6 வட்டங்களில் நாளை(30_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

 

அம்மா திட்ட முகாம்

 

நீலகிரி மாவட்டத்தில் 24.07.2015 முதல் அம்மா திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய உழவர் அட்டை, வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, விதவை சான்று மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர்சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம் மற்றும் வளர்ச்சித்துறை சார்ந்த குறைகள் கேட்டு குறை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

5_வது வெள்ளிக்கிழமை

இத்திட்டமானது டிசம்பர் மாதம் 5_வது வெள்ளிக்கிழமையான நாளை(30_ந் தேதி) ஊட்டி வட்டத்தில் மசினகுடி சமுதாய கூடம், குன்னூர் வட்டத்தில் பழைய அருவங்காடு இந்திரா நகர் சமுதாய கூடம், கோத்தகிரி கீழ்கோத்தகிரி பஜார் சமுதாயகூடம், குந்தா வட்டத்தில் பெங்கால் மட்டம் சமுதாயகூடம், கூடலூர் வட்டத்தில் பாண்டியார் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, பந்தலூர் வட்டத்தில் கல்லிச்சால் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே இப்பகுதி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்