அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      அரியலூர்
pro ariyalur1

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று (02.01.2017) நடைபெற்றது.

 

 

265 மனுக்கள்

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 265 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் , இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் பவர்க்ரிட் கார்பொரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (மத்திய எரியசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனம்) மருத்துவ ஊர்திகளை தேவைப்படும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நாடு முழுவதும் நன்கொடையாக வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார மையத்திற்கு அரியலூர் மாவட்டம் பவர்க்ரிட் நிறுவனத்தின் மூலம் (சுமரர் ரூபாய் 7,50,000 மதிப்புள்ள குளிர் சாதன வசதியுடன் கூடிய) டாடா விங்கேர் மருத்துவ ஊர்தியை அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் சோமசுந்தரம் அவர்களிடம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வாகன சாவியை வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும்;, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகராகப் பணிபுரிந்து 18.10.2016 அன்று பணியிடையே காலமான நா.சங்கநாராயணன் என்பவரின் வாரிசுதாரரான மகன் ச.விக்னேஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் நிலையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெங்கநாதன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை யோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் தி;ட்டம்) மங்கலம், கூடுதல் பொது மேலளர் (பவர்க்ரிட்) சுரேந்திரன், சரவணன் மற்றும் அரியலூர் பவர்க்ரிட் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: