எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டஅளவிலான ஊரக விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வு போட்டிகள் எதிர்வரும் 07.01.2017 முதல் 11.01.2017 முடிய திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவால் காலை 09.00 மணிமுதல் நடத்தப்பட உள்ளது. இம்மாதம் 7-ம் தேதி திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல்,மேசைப்பந்து,மற்றும் வாலிபால் விளையாட்டுக்களுக்கான மாவட்ட போட்டிகளும்,மல்யுத்தம்,வளைகோல் பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டுக்களுக்கான தேர்வுப் போட்டிகளும் நடைபெறும்.
மாவட்ட போட்டிகள்
8-ம்தேதி மன்னார்குடி எம்.ஆர்.டி ஜிம் வளாகத்தில் பளுதூக்குதல், மற்றும் குத்துச்சண்டை, விளையாட்டுக்களுக்கான மாவட்டபோட்டிகள் நடைபெறும். 9-ம் தேதி திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் தடகளம், டேக்வோண்டோ, இறகுப்பந்து மற்றும் கபாடி விளையாட்டுக்களுக்கான மாவட்ட போட்டிகளும், 10-ம் தேதி மிதிவண்டி போட்டி, கோ-கோ,கால்பந்து, ஜுடோ, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வில்வித்தை மற்றும் ஊஷ{ விளையாட்டுக்களுக்கான தேர்வுப்போட்டிகளும் 11-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்கில் டென்னிஸ் மாவட்ட போட்டி நடைபெறும்.
மேற்படி மாவட்ட போட்டிகளில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு, போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களுக்குரூ.350ம் இரண்டாம் இடம் பெறுபவர்களுக்குரூ.250ஃம் மூன்றாம் இடம்; பெறுபவர்களுக்குரூ.150ம் தனித்தனியாகவும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். 14 வயதிற்குட்பட்டவர்கள் 01.01.2003 அன்றோ அல்லது அதற்கு பின்பு பிறந்தவர்களாகவும், 17 வயதிற்குட்பட்டவர்கள் 01.01.2000 அன்றோ அல்லது அதற்குபின்பு பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
மேற்படி, தேர்வுபோட்டிகளில் ஒரு விளையாட்டிற்கு இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக மாநில போட்டிக்கும்,மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிக்குஅரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.
திருவாரூர் மாவட்டத்தைசார்ந்த 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குழுவாகவோ,தனிநபராகவோ அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டுமென மாவட்டகலெக்டர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


