இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      தூத்துக்குடி

தென்காசி,

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு  மணிமுத்தாறு   தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஒன்பதாம் அணித் தளவாய்   ஐயம்பெருமாள்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை தாங்கிச் சிறப்புரை வழங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  ரமேஷ் ராஜா  கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் அவர்களும், பாரத் கல்விக் குழுமச் செயலர் காந்திமதி மோகனகிருஷ்ணன் அவர்களும், பள்ளி முதல்வர் உஷா ரமேஷ் அவர்களும் முன்னிலை வகித்தனர். இருபால் ஆசிரியர்களும், மாணவ – மாணவியர்களும் கலந்து கொண்டனர்.  பாரத் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் செயலர் ஆகிய இருவரும் விழாவின் சிறப்பு விருந்தினர்களைப் பொன்னாடை அணிவித்துப் பெருமைப்படுத்தினர். விழாவின் தொடக்கமாக மாணவி மதுரா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் இறை வணக்கப் பாடலைப் பாடினர். மாணவன் நஸீம் மற்றும் பயாஸ் ஆகிய இருவரும் தொகுப்புரை வழங்கினர். மாணவி ஷகினா வரவேற்புரை வழங்கினார். மாணவி பிளசி ஸ்டெஜில் விளையாட்டுத் துறை முழு ஆண்டு அறிக்கை வாசித்தார். ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் நால்வர்ணக் கொடிகளை ஏந்திய அணிவகுப்பைப் பள்ளி மாணவத் தலைவி ஷபா வழிநடத்திச் சென்றார். மாணவி இன்பன்ட் மிஸ்டிகா குழுவினர் ஒலிம்பிக் விளக்கை ஏற்றினர். அதைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் மறைந்த முன்னாள் முதல்வர் இரும்புப் பெண்மணி . அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு அரங்கேற்றப்பட்டது. கே.ஜி    மாணவ – மாணவிகள் ஜால்ரா துரப்பணம் செய்தனர். ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவ – மாணவிகள் டஸ்டர் துரப்பணம் நடத்தினர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள   மாணவ – மாணவிகள் தம்புள்ஸ் துரப்பணம் செய்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவ – மாணவிகள் மலர்த் துரப்பணம் நடத்தினர். பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் லெஸிம் துரப்பணம் செய்து காட்டினர். அதைப் போல டேக் வாண்டோ, சிலம்பம், பிரமிடு, மல்லர் கம்பம், யோகா, ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு கலைகளையும் மாணவர்கள் செய்து காட்டினர். மேலும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயமும், 4 ஒ 100 தொடர் ஓட்டப் போட்டியும் நடத்தப்பட்டன. ஒட்டு மொத்த விளையாட்டுகளிலும் வெற்றி பெற்றுச் சிறப்பிடம் பிடித்த வீரர்களான மாணவன் பயாஸ் அகமது, மாணவி இன்பன்ட் மிஸ்டிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு விருந்தினர் கேடயம் வழங்கிப் பாராட்டினார். வுpளையாட்டு விழாப் போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை உசேன் போல்டு சிவப்பு அணி பெற்றது. இறுதியாக மாணவி சினேகா நன்றியுரை வழங்கினார். விழா தேசிய கீதத்தோடு இனிதே நிறைவேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்: