முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு முகத்துவாரம் விரைவில் தூர்வாரி சரி செய்யப்படும் : நலத்திட்டம் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      திருவள்ளூர்

வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.குறிப்பாக பொன்னேரி வட்டம்,பழவேற்காடு சுற்றுலா மற்றும் மீனவப்பகுதிகளில் பெருத்த சேதத்தை வர்தா புயல் ஏற்படுத்தியது.திருவள்ளுர் மாவட்டத்தில் வர்த்தா புயல் நிவராணப் பணிகளுக்கென 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டன.வேரோடு மரங்கள் வீட்டின் மீது சாய்ந்தது,மீனவ கட்டுமரங்கள்,பைபர் போட்டுகள் காற்று மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூக்கி வீசப்பட்டது.மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டது.2000க்கும் மேற்ப்பட்ட கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தரைமட்டமாகின.புயல் காற்றுடன் கடல் அலைகள் சீற்றத்தால் கரைபுரண்ட உப்பு நீரினால் நிலத்தடி நீர் உப்பானது.மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக முன்கூட்டியே முகாம்களில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துதல்,சாலை பணிகள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று முடிந்தன.முகாம்களில் தங்கிருந்த மக்கள் பத்திரமாக வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.பழவேற்காடு பகுதியில் வர்தா புயலால் ஏற்பட்ட பெருத்த சேதம் பற்றிய கணக்கெடுப்பு முடிந்து நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பழவேற்காடு மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.படகுகள்,வலைகள்,மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சேதங்களுக்காக 4 கோடியே 42 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அளவிலான உதவித்தொகைகள் வழங்க்கப்பட்டது.மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின்,மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நலத்திட்டங்களை வழங்கினர்.

 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்

 

மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மாவின் ஆட்சியில் பழவேற்காடு பகுதியில் வாழும் 25 கிராமங்களில் உள்ள மீனவர்களை கடல் மீன்பிடி மீனவர்களாக அறிவித்து தேசிய கடல் நீர் மீனவர்களாக அனைத்து சலுகைகளையும் பெறவைத்தார். மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகையினை 5000 ரூபாயாக உயர்த்தினார்.13 கடலோர கிராம மக்கள் பழவேற்காடு ஏரியினை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.இன்னும் அவர் எண்ணிய எண்ணமெல்லாம் இந்த ஆட்சியில் மீனவ சமுதாய மக்களுக்கு கிடைக்கப்போகிறது.மேலும் பழவேற்காடு ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையான முகத்துவாரம் தூர்வாரி சரிசெய்யும் பணிகள் மிக விரைவாக தொடங்கப்பட இருக்கின்றது.இதற்கான பணிகளை மேற்க்கொள்ள நாளை முதல் அதற்கான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுர் எம்.பி.வேணுகோபால்,பொன்னேரி எம்.எல்.ஏ.சிறுணியம் பலராமன்,மாவட்ட வருவாய் அலுவலர் முத்து,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி மீனவ பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிமேலழகர்,மாங்கோடு மோகன்,சுமித்ராகுமார்,கோட்டைக்குப்பம் சந்திரசேகர்,சாட்டாங்குப்பம் கஜேந்திரன்,தேசப்பன்,வைரவன்குப்பம் ரகு,மீன்வளத்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,பயனாளிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்