பள்ளிபட்டு வட்டத்தில் 46 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு : நரசிம்மன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      சென்னை
thiruthanni 1

தமிழக அரசின் சார்பில் பள்ளிப்பட்டு வட்டத்தில் 46 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலை வழங்கும் பணியை பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ துவக்கிவைத்தார். தமிழக அரசின் சார்பில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி சேலை, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் 46,280 குடும்பங்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் வேட்டி சேலை வழங்கும் பணி நேற்று துவங்கியது. அத்திமாஞ்சேரிபேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பங்கேற்று குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வேட்டி சேலை வழங்கி துவைக்கிவைத்தார். வருவாய்த் துறை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் சார்பில் வட்டத்தில் மட்டும் 46.280 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆவின் தலைவர் த.சந்திரன்,ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சாந்திபிரியா சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமநாயுடு, ஒன்றிய அவைத்தலைவர் ஜெயவேலு, பி.கே.பாண்டியன், கஜராஜன், முத்துராமன், மோகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: