திருவண்ணாமலையில் ரமணர் 137ம் ஆண்டு ஜெயந்திவிழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo015

திருவண்ணாமலையில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 137ம் ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை செங்கம் சாலையில் (கிரிவலப் பாதை) ரமணாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு ரமணமகரிஷியின் 137ம் ஆண்டு ஜெயந்தி விழா வியாழனன்று நடந்தது. அதிகாலை நாதஸ்வர மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதன்தொடர்ச்சியாக தனூர்மாத பூஜை, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், சிறப்பு தமிழ் பாராயணம், பால்பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மங்கல ஆர்த்தி ஆகியவை நடந்தன. இதில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு ரமணர் குறித்த பாடல்களை பாடினார். விழாவை முன்னிட்டு பெங்களூர் சக்குபாய் குழுவினரின் ரமண இன்னிசை, சென்னை ஸ்ரீராம் பார்த்தசாரதி குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி, பெங்களூரு ரமண பாலசந்தர் குழுவினரின் வீணை கச்சேரி ஆகியவை நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரமணாஸ்ரம தலைவர் சுந்தரரமணன், தலைமை நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ஸ்ரீ ரமண மந்திரத்திலும், திருச்சுழி சுந்தர மந்திரத்திலும் ஜெயந்திவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: