வாக்களிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே கலெக்டர் இல.சுப்பிரமணியன், கலந்துரையாடல்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

 

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் 2017 முன்னிட்டு 19.01.2017 இன்று இந்திய தேர்தல் ஆணைய உத்திரவிற்கிணங்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர்இல.சுப்பிரமணியன், அவர்களால் விழுப்புரம் நகர அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9ஆம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய உள்ள மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழுப்புரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 950 மாணவிகளும், காமராஜ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750 மாணவர்களும் கலந்து கொண்டார்கள். "இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல்" (நுஅpழறநசiபெ லழரபெ யனெ கரவரசந எழவநசள) என்ற கருப்பொருளுக்கு இணங்க இந்நிகழ்ச்சியில்; மாணவர்கள் 18வயது பூர்த்தியடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டியது குறித்தும் ஜனநாயக உரிமையான வாக்களிப்பதில் தவறாமல் பங்குகொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் கருத்துரைகள் வழங்கினார்கள். கலெக்டர் கருத்துரை சொற்பொழிவு வழங்கிய பின்பு மாணவர்களால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு கலெக்டர் உரிய விளக்கம் கொடுத்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியின்போது விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அ.ஜீனத்பானு, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வீ.வெற்றிவேல் மற்றும் பள்ளி ஆசிரிய பெருந்தகைகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: