முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிஞ்சிப்பாடியில் 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      கடலூர்

குறிஞ்சிப்பாடி, -

 

குறிஞ்சிப்பாடியில் 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர் மாணவிகள் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓம்முருகா ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மாணவர் மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பேருந்து நிலைய அருகில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய விளையாட்டில் ஒன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டின் மேல் உள்ள தடையை நீக்கவேண்டும் ,காட்சி பட்டியலில் இருந்து நீக்கவேண்டும், அன்னிய நாட்டின் பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும், என்றும் கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.இதில் வெளிநாட்டு பானமான கோக்காகோலா,பெப்சி,செவனப்,போன்ற பாட்டீல்களை போட்டு உடைத்து இனிமேல் நாங்கள் இது போன்ற பானங்களை குடிக்கமாட்டோம் என்று சபதம் எடுத்து கொண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பானங்களையும் இயற்கை முறையில் கிடைக்கும் இளநீர், போன்ற ஆரோக்கியமான பானங்களை அருந்துவோம் என்று சபதம் எடுத்து கொண்டார்கள்.

 

இது போல வடலூர் கருங்குழி ஏரிஸ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வடலூர் பேருந்து நிலைய அருகில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நெய்வேலி டவுண்சீப் ஜவஹர் கல்லூரி மாணவர் மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக இரண்டு நாடுகளாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்