முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் தை பெருவிழா

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      நீலகிரி

ஊட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் தை பெருவிழா நடைபெற உள்ளது.

                                     தேர்பவனி

ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் நகர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சித்தர் பீடத்தில் தை பெருவிழா இன்று (20_ந் தேதி)தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அதனையொட்டி இன்று பகல் 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் தேர்பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து ஸ்ரீ மசினியம்மன் கோயிலிலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்படுகிறது. பகல் 1 மணிக்கு அன்னதானம், 3 மணிக்கு சௌந்தயரிய லஹாரி பூஜையும் மண்டலி பூஜையின் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

                            சிறப்பு பூஜை அன்னதானம்

21_ந் தேதி முற்பகல் 11 மணிக்கு அருள்மிகு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பல மாகா யாகமும், 12 மணிக்கு அபிஷேகமும், 1 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு பராசக்தி மன்றத்தினரின் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. 22_ந் தேதி காலை 10.30 மணிக்கு அன்னையின் திருக்கரகம் தீச்சட்டி ஏந்தி சித்தர் வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சித்தர் பீட நிர்வாகி தவத்திரு சிவாசாமி அடிகளார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago