முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கருவேல மரங்களை அகற்றுதல் உறுதிமொழி

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      திருநெல்வேலி

தென்காசி,

 

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

 

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் குறித்த உறுதிமொழி ஏற்கவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

 

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றார். மாணவிகள் அபிராசைனஸ், மகேஸ்வரி ஆகியோர் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உறுதிமொழியினை வாசித்தனர்.

 

சுற்றுப்புற சூழலுக்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், வேளாண் நிலத்திற்கும், கால்நடைகளுக்கும், மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றுவேன் என உறுதி ஏற்கிறேன்.

 

எனது பெற்றோர்களுக்கும், அருகில் வசிப்பவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் சீமைக்கருவேல மரத்தின் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவ்விடங்களில் இருக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றிட உறுதுணையாக இருப்பேன். இம்மரங்களை முழுமையாக அற்றி அவ்விடங்களில் பயன்தரக்கூடிய மரங்களை வளர்த்திட உறுதுணையாக இருப்பேன்.

 

எனது சுற்றுப்புறத்தை சீமைக்கருவேல மரங்களே இல்லாத நிலமாக மாற்றிட என்னால் இயன்ற வரை சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago