முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-வது தேசிய வாக்காளர் தின விழாவில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி வழங்கினார்.

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சென்னை

 

            காஞ்சிபுரத்தில் 7-வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் தேரடியில் துவங்கிய பேரணி அண்ணா அரங்கத்தை வந்தடைந்தது.

 

 பின்னர் அண்ணா அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், ஜனநாயகத்தின் அடையாளம் தான் வாக்குரிமை, மக்களால், மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தில் மேலோங்கி நிற்கும் நாடு நம் இந்திய திருநாடு. சுதந்திர இந்தியாவில் சட்ட வடிவமைப்பை உருவாக்கியவர் டாக்டர்.அம்பேத்கார். முதலில் 21 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நிலைமை இருந்தது. தற்போது அது 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமை என்கிற நிலைமை எடுக்கப்பட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குகின்றனர்.  மாணவ-மாணவியர்கள்  இந்த வாக்குறுதியை நல்ல முறையில் பயன்படுத்தி நமது நாடு ஜனநாயகத்தின் தலைசிறந்த நாடு என்கிற நற்பெயரை உறுதிப்படுத்தும் அளவில் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

இவ்விழாவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே  நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த வாக்குசாவடி நிலை  அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்.

 

            தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ்களை அந்தந்த பள்ளி, கல்லூரி  ஆசிரியர்களிடம்  மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி வழங்கினார்.

 

            பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும்

 

 “ஜனநாயகத்தின் மீது  இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு ,மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்” எனும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

            பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், சார் ஆட்சியர் அருண்தம்புராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  அங்கையர்கண்ணி, காஞ்சிபுரம் வட்டாட்சியர் கியூரி  ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்