எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை, தூத்துக்குடி வடபாகம் போலீசார் மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, லோடு ஆட்டோவில் 30 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு மூட்டையும் சுமார் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. உடனடியாக லோடு ஆட்டோவில் இருந்த தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இசக்கி (வயது.37), துரை (வயது.39) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், பிடிபட்ட 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்கு பதிவு செய்து இசக்கி, துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடு, வீடாக ரேஷன் அரிசியை சேகரித்து, கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


