திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தினை சீரமைக்கும் பணி

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

திருச்செந்தூர்,

 திருச்செந்தூரில் செந்தூர் நலச்சங்கம் சார்பில் ஆவுடையார்குளத்தினை சீரமைக்கும்  பணி நடைபெற்றது.திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், செந்தூர் நலச்சங்கத்தின் சார்பில், ஆவுடையார்குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கரையோர கழிவுகள் அகற்றப்பட்டது.திருச்செந்தூர் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன், தாலுகா காவல் ஆய்வாளர் க.ஆடிவேல், ஸ்ரீவைகுண்டம், துணை வட்டாட்சியர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாலை வரை இப்பணி நடைபெற்றது. இதில் எவ்வித பாகுபாடின்றி, ஆர்வமுடன் விவசாயிகள், திருச்செந்தூர் சுற்று வட்டார இளைஞர்கள், உடன்குடி, சுந்தராபுரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகரின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயக வழியில் பூர்த்தி செய்திட இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: