கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்திய கணிப்பொறி மாணவர் பிரிவு துவக்கவிழா

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
kvp nec18

கோவில்பட்டி.பிப்.18-

 

கே.ஆர்.நகர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இந்திய கணிப்பொறி மன்றம் - மாணவர் பிரிவு சார்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு  கல்லூரி வளாகத்தில் வைத்து வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் முனைவர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம், முதல்வர் முனைவர் எஸ்.சண்முகவேல் மற்றும் கல்லூரியின் சி.எஸ்.ஐ தலைவர் முனைவர் டி.மணிமேகலை முன்னிலை வகித்தனர். சி.எஸ்.ஐ மாணவர் பிரிவு மாநில மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.பாலமுருகன்;, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். கல்லூரியின் சி.எஸ்.ஐ மாணவர் பிரிவு தலைவர் பி.முரளி வினோத் வரவேற்புரை வழங்கினார்.எல்.ஜெராட் ஜுலஸ், சி.எஸ்.ஐ ஒருங்கிணைப்பாளர் முன்னுரை வழங்கினார். அடுத்ததாக சி.எஸ்.ஐ ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜ்குமார் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரியின் முதல்வர் தமது உரையில் மாணவர்களை அனைத்து கல்லூரி நிகழ்வுகளிலும் பங்கெடுக்குமாறும், தொழில்நுட்ப அடிப்படை அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தலைமை விருந்தினர் தமது உரையில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் வாஷிங்டன் அக்கார்ட் ஆகிய செயல்திட்டங்களைப் பற்றி விரிவாக கூறினார். மேலும் மாணவர்களை இக்கருத்தரங்கின் மூலம் அமைப்புத்திறன் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இவ்விழாவில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவருக்கான கிளை விருது, செல்வி ஜெ.பெனீட்டா கிரேஸ்-க்கு வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் பில்ட் டூ டெஸ்ட்ராய், மினிட் டூ வின் இட், பாலிக்லாட், கேமிங் போன்ற நிகழ்வுகளும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் கருத்தரங்கும் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சி.எஸ்.ஐ தலைவர் முனைவர் டி.மணிமேகலை தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் எல்.ஜெராட் ஜுலஸ், கே.ராஜ்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: