முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு 94 சதவீத குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      சென்னை

தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் 10.02.2017 அன்றும், விடுபட்ட குழந்தைகளுக்கு 15.02.2017 அன்றும் வழங்கப்பட்டது.ஊரக, நகர்ப்புற மற்றும் மாநகர பகுதிகளில் வாழும் சிறுகுழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் குடற்புழு தொற்று காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர்களின் சுறுசுறுப்பு குறைந்து சோம்பல் தன்மை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும்பொருட்டு, 1 வயது முதல் 19 வரையுள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர்கள் உண்ணும் உணவுகள் குடற்புழு மற்றும் கொக்கிப் புழுக்களால் வீணடிக்கப்படாமல், அதன் சக்தி நேரடியாக உடலில் சேர வழிவகை ஏற்படுகிறது.

 

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் 10.02.2017 மற்றும் 15.02.2017 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்களிலும், மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS--)தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களிலும் அனுசரிக்கப்பட்டது. 10.02.2017 மற்றும் 15.02.2017 ஆகிய இரு தினங்களில் மொத்தம் 15 இலட்சத்து 6 ஆயிரத்து 676 குழந்தைகளுக்கு (94ரூ) குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள விடுபட்ட குழந்தைகளுக்கு இவ்வார இறுதிக்குள் குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்