முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கல்லூரியில் 232 பேருக்கு பட்டயமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 5வது பட்டயமளிப்பு விழாவில் 232 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் 5வது பட்டயமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். டி.ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர்கள் விஜயகுமார், தினேஷ், கல்லூரி நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் பிச்சைமணி வரவேற்றார். புலவர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் வாழ்த்துரை வழங்கிய டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் பட்டயம் பெற்ற மாணவர்கள் நல்ல வேலையில் சேர்ந்து வீட்டுக்கும் நாட்டிற்கும் பயனை தரும் அதே நேரம் தொழில் முனைவோராக அவர்கள் மாற அரசின் உதவிகள் பக்கபலமாக உள்ளதென்பதால் அனைவரும் தொழில் முனைவோராக வேண்டும் என்றார்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வாய்ஸ் நிறுவனத்தின் செயலாளரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ஆறுமுகம் குருசாமி பேசுகையில் பட்டய படிப்பு முடித்த மாணவர்கள் மேற்கல்விக்கு சென்று ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என வாழ்த்தினார்.

தொடர்ந்து தொழில்நுட்ப தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் 223 மாணவர்களுக்கும் பட்டயமும் விழாவில் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago