எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,தாளம்பட்டி ஊராட்சி,தாளம்பாடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 12-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நேற்று (01.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 12வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்பணி 01.03.2017 முதல் 21.03.2017 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 3.53 இலட்சம் கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 110 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தாளம்பாடியில் 175 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து கோமாரிநோய் தடுப்பூசி அடையாள அட்டையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் டாக்டர்.மு.சீனிவாசன், உதவி இயக்குநர் டாக்டர் .இரா.மணிசேகரன்,சிறப்புறிநர் டாக்டர்.புரோசத்தமன், கால்நடைமருத்துவர் டாக்டர்.ராஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


