முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமபுரிகோரு-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் இரண்டுக்கு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை துவக்கம்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      தர்மபுரி

தருமபுரி கோப் ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில்“கோ-ஆப்டெக்ஸ்”, ;தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாய் பொது மக்களின் ஆதரவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.      நெசவாளர்களின் படைப்புகளை பொது மக்களிடம் அறிமுகப்படுத்தி, விற்பனை செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியும் அவர்களின் திறமைகளுக்கு மதிப்பளித்தும் கோ-ஆப்டெக்ஸ் தனது சிறப்பான சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறது.இத்தகைய பெருமை மிக்க நிறுவனமாம் கோ-ஆப்டெக்ஸில் “இரண்டுக்கு விலை கொடுங்கள் இன்னொன்றை இலவசமாய் பெறுங்கள்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு விற்பனையை சேலம் தங்கம் பட்டு மாளிகையில் நேற்று 02.03.2017 காலை 10.30 மணி அளவில் சேலம் நகர துணைக் காவல் துறை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஜோர்ஜி ஜார்ஜ், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.           “இரண்டுக்கு வாங்கினால் ஒன்று இலவசம் 2017” சிறப்பு முதல் விற்பனையை     உமாமகேஸ்வரி, சேலம்  பெற்றுக் கொண்டார்கள்     இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் “கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை” வாங்கி பயனடையலாம்.  மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ரூ.3,000- முதல் ரூ.1,50,000- வரை மதிப்புள்ள காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ரூ.5,000- முதல் ரூ.8,000- விலையில் மென்பட்டுப்புடவைகள், எல்லோருக்கும் பட்டு, கலாச்சாரப்பட்டு, சரித்திரா பட்டு மற்றும் கோரா புடவைகள், காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் நேர்த்தியான கலர்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில்க் ரெடிமேட் சர்ட், ஜெயகார்த்திகா காட்டன் சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், டர்க்கி டவல், குர்த்தீஸ், ஏற்றுமதி இரகங்கள் மற்றும் அழகிய வடிவமைப்பில் படுக்கை விரிப்புகள், போர்வைகள், ஜமக்காளங்கள், திரைச்சீலைகள், சுடிதார், நைட்டிகள், ரெடிமேட் சர்ட்டுகள், தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மிக அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.          இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர்கள்சு.ப{பதி, சேலம் மாவட்டம், கலைவாணி, நாமக்கல் மாவட்டம்ஆ.தங்கவேல், கரூர் மாவட்டம் ஆகியோர் முன்னிலையில் கோ-ஆப்டெக்ஸ் சேலம் மண்டல  மேலாளர்சு.சண்முகம், மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி), ந.குணசேகரன், மேலாளர் (அரசுத்திட்டம்) ஜே.ட்டி.சாந்தாராம், துணை மண்டல மேலாளர் (தணிக்கை).ப.அம்சவேணி, கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை மேலாளர்கள் எஸ்.சரவணன், .எ.சுந்தரவடிவேலு, பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.இச்சிறப்புத் திட்டம் 28.03.2017 வரை மட்டுமே இத்திட்டத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி நெசவாளர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago