Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் கே.விவேகானந்தன் ஆய்வு

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் கே.விவேகானந்தன், நேற்று (02.03.2017)  பார்வையிட்டார். தருமபுரி மாவட்டத்தில் 148 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11287 மாணவர்கள், 10661 மாணவிகளும் மொத்தம் 21948 பேர் 57 மையங்களில் இத்தேர்வினை எழுதுகிறார்கள். இத்தேர்விற்காக 10 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வில் எவ்வித முறைகேடும் இல்லாமல் நடைபெற 228 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட அலுவலர்கள் தலைமையில் 6 பறக்கும் படை கண்காணிப்பு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்காக 16 பேர் சொல்வதை எழுதுபவர்களாக (ளுஉசiடிநள) நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் தேர்வினை கண்காணிக்க தொடக்கக் கல்வி இணை இயக்குநர்                         சசிகலா,  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர்   கே.பி. மகேஸ்வரி, தேர்வு மைய கண்காணிப்பாளர்  கே. விஸ்வநாதன், துறை அலுவலர்   ஹேமலதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பெ. சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago