கடலூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கடலூர்

தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி திட்டம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 06.02.2017 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி திட்ட பணிகள் சம்மந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் டி.பி.ராஜேஷ், தலைமையில் ஆய்வுக்கூட்டம் 14.03.2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 9 மாதம் முதல் 15 வயது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய குழந்தைகள் 620062 ஆகும். இதில் 13.03.2017 வரை 465533 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 75 சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 25 சதவிகிதம் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க வேண்டிய நோக்கத்தில் ¬ மாவட்ட ஆட்சித்தலைவர் 14.03.2017 அன்று துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லார், முதக்மை கல்வி அலுவலர் முரளி, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஒரு சில பள்ளியில் இன்னும் முழு அளவில் தடுப்பூசி போட்டு முடிக்காத தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள 100 சதவிகிதம் தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தப்பட்டது. இதுவரை போட்டுக்கொண்ட மாணவர்கள் எவருக்கும் நமது மாவட்டத்தில் ஒரு குழந்தைகளுக்கு கூட எந்த பாதிப்பும் வரவில்லை. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது அரசு மருத்துவர்களின் மேற்பார்வையில் பயிற்சிப் பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, பெற்றோர்கள் எந்த பயமும் இன்றி இத்தடுப்பூசியை தங்கள் குழந்தைகளுக்கு கோட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வரும் நாட்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வார காலத்திற்குள் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: