மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo05

 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், கருத்தரங்கம் மற்றும் தாய், சேய் நலம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பாக பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாமில் 90 சதவீதத்துக்குமேல் சாதனை செய்த மேக்களுர், ரெட்டியார்பாளையம், வடமாதிமங்கலம், ஜமுனாமரத்தூர், புதுப்பாளையம், நார்தாம்பூண்டி, களம்பூர், கொளத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும், ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வானாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிறந்த முறையில் பிரசவம் பார்த்து வரும் ஜமுனாமரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிறந்த முறையில் நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வாழியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிறந்த முறையில் செயல்படுத்தி வரும் மெய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிறந்த முறையில் குடும்ப நலன் மேற்கொண்டு வரும் காளசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிறந்த முறையில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் நிதியினை பயன்படுத்திய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத் துறை சார்பாக, பிரசவ நேரத்தில் கர்பிணி பெண்களுக்கு அவசர சிகிச்சை உபகரணம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்ததற்காக நினைவு பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் கிரிஜா, துணை இயக்குநர்கள் சுகாதாரப் பணிகள் டாக்டர் மீரா, டாக்டர் கோவிந்தன், குடும்ப நலம் ராஜேந்திரன், காசநோய் டாக்டர் அசோக் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ நிபுணர்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: