முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி: கலெக்டர் கே.விவேகானந்தன் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கி தெரிவித்ததாவது நமது மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 1000 நியாய விலைக் கடைகளும், 9 மகளிர் நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 40 நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 1049 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 3,84,174 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளது. தற்போது முதல் கட்டமாக தருமபுரியில் 10782 மின்னணு குடும்ப அட்டைகளும், நல்லம்பள்ளியில் 11352 மின்னணு குடும்ப அட்டைகளும்;, பாலக்கோடு 8717 மின்னணு குடும்ப அட்டைகளும்;, காரிமங்கலம் 12797 மின்னணு குடும்ப அட்டைகளும்;, பென்னாகரம் 15394 மின்னணு குடும்ப அட்டைகளும்;, அரூர் 8330 மின்னணு குடும்ப அட்டைகளும்;, பாப்பிரெட்டிப்பட்டி 8856 மின்னணு குடும்ப அட்டைகளும்; ஆக மொத்தம் 76,228 குடும்ப அட்டைதாரர்ளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக நமது மாவட்டத்தில் 1049 நியாய விலைக்கடைகள் வாயிலாக, அத்தியாவசிய பொருட்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணைய் மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணைய் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அத்தியவசியப் பொருட்கள் வழங்குவதற்கு தற்போது தாள்களில் அச்சடிக்கப்பட்டு குடும்ப அட்டை பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இத்திட்டம் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் நியாயவிலைக்கடைகளில் தேவையான அளவு அத்தியவசியப் பொருட்கள் இருப்பு வைப்பதை உறுதிப்படுத்தவும், போலி குடும்ப அட்டைகள் மற்றும் போலி பட்டியலிடுதல் ஆகியவற்றை தவிர்க்கவும், மேலும் பொதுவிநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கி அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து அனைத்து நடவடிக்கைகளையும் இத்திட்டத்தின் மூலம் முழுமையாக கண்காணித்து, இணையதளம், மின்னஞ்சல், குறுந்தகவல் தொலைபேசி வாயிலாக நுகர்வோரின் குறைகளை தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1077, "1967" ம‰று« "1800 425 5901" ஆ»ய க£டணäšலா டிதாலைபெÁ என்ற எண்களில் புகார்கள் தெரிவிக்க இணையவழி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி வட்டத்தில் 999 மின்னணு குடும்ப அட்டைகளும், பாலக்கோடு 767 மின்னணு குடும்ப அட்டைகளும், பென்னாகரம் 1012 மின்னணு குடும்ப அட்டைகளும், அரூர் 812 மின்னணு குடும்ப அட்டைகளும், பாப்பிரெட்டிப்பட்டி 926 மின்னணு குடும்ப அட்டைகளும், நல்லம்பள்ளி 1160 மின்னணு குடும்ப அட்டைகளும், காரிமங்கலம் 921 மின்னணு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 6597 மின்னணு குடும்ப அட்டைகளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் படிப்படியாக இந்த மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சந்தானம், துணைப்பதிவாளர் மணிகண்டன், வட்டாட்சியர்கள் அதியமான், கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் வள்ளி, உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago