அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது

சனிக்கிழமை, 6 மே 2017      கோவை
MAY 06- Hon ble Ministers Review Meeting Photo

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  குடிசை வீடுகளே இல்லாத உன்னத இலக்கை அடைகின்ற வகையில் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில்  வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ஆகியோர் பெருமிதம்

வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 10மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வீடில்லாத அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வரும் பணிகள் குறித்த  ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ்  மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர்  ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   முன்னிலையில்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,  வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக அலுவலர்களிடம் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலும், ஆலோசனையினையும் வழங்கி தெரிவித்ததாவது,

தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலம்

இந்த ஆய்வுக்கூட்டத்தில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பேசுகையில்,
 அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து  அம்மா அவர்களின் நல்லாசியுடன் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  அம்மா  இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவ்க்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும்  அம்மா  வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு  தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் 2,46,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதுடன் இதில் 1,00,000வீடுகள் பணி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு அதிகளவு வீடுகட்டி கொடுத்த மாநிலமாக தமிழகம், முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

வீடில்லா குடும்பங்களுக்கு


கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசின் நிதியுதவித்திட்டத்தின் கீழும் மற்றும் மத்திய அரசு நிதியுதவித்திட்டத்தின் கீழும் கட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10லட்சம் மதிப்பீட்டில் முழு மான்யத்துடன் வீடு கட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. வீட்டுமனை இடமிருந்தால் போதும், உடனடியாக வீடுகட்ட உரிய ஆணை வழங்கப்படும் அதுமட்டுமின்றி வீடு கட்டவோர்க்கு எளிய வகையில் மான்ய விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் திருமணமாகியிருந்தால் அவர்களுக்கு வீடு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு  வசிக்கும் வீட்டின் மாடியிலே வீடு கட்ட அதற்கும் ரூ.2.10லட்சத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது. அதேபோல், சிலப்பகுதிகளில் இடம் இல்லாத நிலையை கருத்தில்கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், அரசு மான்ய தொகையை விட கூடுதலாக செலவுசெய்து வீடு கட்டுவோர்களுக்கு, ரூ.6.00லட்சம் வரை குறைந்த வட்டியில் மான்ய கடனும் வழங்க்பட்டு வருகின்றது. இதுபோல் ஏழை எளிய வீடில்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்கள் முழுமையாக  அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்தாhர்.
தொடர்ந்து  வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  பேசுகையில்,
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசைப்பகுதிகளில்லா மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை ஜீன் 2015-ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட நான்கு வகைப்பாடுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. குடிசைப்பகுதிகள் அமைந்துள்ள இடத்திலேயே மறுமேம்பாட்டு திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ.1.00 இலட்சம்) 2. வீடு கட்ட / வாங்க பெறப்படும் கடனில் வட்டி சலுகை திட்டம் (3மூஇ4மூ ரூ 6.5மூ  வட்டி சலுகை) 3. மக்களின் சக்திகேற்ப வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம்- ரூ.1.50 இலட்சம், மாநில அரசு மானியம் ரூ.5.00 இலட்சம் வரை) 4. பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ1.50 இலட்சம், மாநில அரசு மானியம் - ரூ.0.60 இலட்சம்).

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை மாநில ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்து உள்ளது. வழிகாட்டுதல் நெறி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வீட்டு வசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்றுள்ளது. கணக்கெடுப்பின்படியும் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படியும் 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஓப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை ரூ.8660.06 கோடி மதிப்பீட்டில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்டங்கள் அளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் மண்டல அளவில் கலந்தாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரை, திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் ஏற்கணவே கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கோயம்புத்தூர் சரகத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வீடுகள் தேவையென கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2766.58கோடி மதிப்பீட்டில் 77,517 வீடுகள் கட்ட திட்டபிரேரணைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியொதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்களும் அதிகளவில் பண்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என  வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்  பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.செல்வராஜ், ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், கஸ்தூரிவாசு, குணசேகரன், முருகன், சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: