முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா மாநிலத்தில் பனாஜி தொகுதி இடைதேர்தலில் போட்டியிடுகிறார் மனோகர் பாரிக்கர்

புதன்கிழமை, 10 மே 2017      இந்தியா
Image Unavailable

கோவா : கோவா மாநிலத்தில் உள்ள பனாஜி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மனோகர் பாரிக்கர் போட்டியிடுவார் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர்

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் அதற்கு முன்னர் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் கோவாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் 17 இடங்களுடன் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்கள், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்கள், தேசியவாத காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த காங்கிரசுக்கு 4 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 8 இடங்கள் தேவைப்பட்ட பாரதீய ஜனதா, பிற கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது.  பாரதீய ஜனதா சார்பில் 61 வயதான மனோகர் பாரிக்கர், கோவா முதல்வர் பதவி ஏற்றார்.

இடைத்தேர்தலில் போட்டி

இந்நிலையில் மனோகர் பாரிக்கர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் சட்டபை உறுப்பினர் தகுதி பெறவில்லை அதனால் கோவாவில் உள்ள பனாஜி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மனோகர் பாரிக்கர் போட்டியிடுவார் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ. ராஜினாமா

பதவியேற்ற 6 மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, அதற்கு வசதியாக பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சித்தார்த் குன்கலியேங்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பிரமோத் சாவந்திடம் வழங்கினார்.

பாரிக்கர் மத்திய மந்திரியாக பதவி உயர்வு பெற்றபிறகு, 2015-ம் ஆண்டு அவரது பனாஜி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் குன்கலியேங்கர் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பனாஜி தொகுதியில் போட்டியிட்டு, ஐக்கிய கோன்ஸ் கட்சி வேட்பாளர் அதனாசியோவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

பாரிக்கர் போட்டியிட வசதியாக குன்கலியேங்கர் போன்று மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிலேஷ் கேப்ரலும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்