தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம்

ALAGAPPA

  காரைக்குடி: -தேசிய தர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம் 4க்கு 3.64 புள்ளிகளுடன் A+ தகுதி பெற் மாநில பல்கலைக் கழகங்களிலே இந்திய அளவில் முதலிடம்

        சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 1985ல் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு தேசிய தரமதிப்பீட்டு குழுவின் யு தகுதியம் 2011ஆம் ஆண்டு மீண்டும் யு தகுதியும் பெற்றது.

         2016-2017 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை தர நிர்ணயம் செய்யப்பட்ட 86 இந்திய பல்கலைக்கழகங்களுடன் 9 பல்கலைக்கழகங்கள் A+ தகுதி பெற்றுள்ளன. இதில் 5 பல்கலைக்கழகங்கள் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மீதமுள்ள நான்கு பல்கலைக்கழகங்கள் மாநில பல்கலைக்கழகங்கள்.

        இதில் அழகப்பா பல்கலைக்கழகம் 4ற்கு 3.64 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற மூன்றும் மகாராஷ்டிரா (சாவித்திரிபாய் பூலே) புனே 3.60, ஒடிசா (உத்கல்) 3.53, காஷ்மீர் (ஜம்மு) 3.51 புள்ளிகள் பெற்றுள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் இளைய பல்கலைக்கழகமான அழகப்பா பல்கலைக்கழகம் தென்னிந்திய அளவிலும் தமிழக அளவிலும் A+ தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேசிய அளவில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என துணைவேந்தர் சுப்பையா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ