சத்தியமூர்த்தி பவனில் இன்று ராகுல்காந்தி கூட்டத்துக்கு 300 நிர்வாகிகளுக்கு அழைப்பு

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      அரசியல்
Rahul Gandhi 2017 06 03

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு 300 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி நேற்று மாலை சென்னை வந்தார். ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். இரவில் அடையாறு எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இன்று (4-ந்தேதி) காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அங்கு கட்சி கொடி ஏற்றி வைத்து காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். அதை தொடர்ந்து கூட்ட அரங்கில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

ராகுல்காந்தி கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு 300 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. முன்னர் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் இன் நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் ராகுல்காந்திக்கு மதிய விருந்து அளிக்கப்படுகிறது. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் வருகையை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து