முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரகூர் அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா வேள்வியுடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தில் அருள்மிகு பிடாரி அம்மன் (காளியம்மன்) கோவிலில் 4நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தேர் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட வரகூர் கிராமத்தில் சக்திவாய்ந்த புராதன சுயம்பாக எழுந்தருளியுள்ள அருள்மிகு பிடாரி அம்மன் (காளியம்மன்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா நேற்று காலை தொடங்கியது வரும் 7ந் தேதி வரை விழா நடைபெறவுள்ளது.

இதையட்டி முதல்நாளான நேற்று வேள்வியுடன் விழா தொடங்கியது. காலை 10 மணியளவில் மாரியம்மன் கோவில் அருகில் சிறப்பு வேள்வியும், கோபூஜையும் நடைபெற்றது. முன்னதாக பிடாரி அம்மனுக்கும், மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக தீபாஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணியளவில் அம்மனுக்கு காப்பு கடுதலும், புதிய தேரில் பிடாரி காளியம்மன் அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெற்றது, 10 மணியளவில் புதிய தேர் கரிக்கோள் விழா நடைபெற்றது. இதில் வரகூர் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டது.

இன்று 5ந் தேதி (திங்கட்கிழமை) 2ம் நாள் கரகாட்டம் மேளகச்சேரி, பிடாரி காளியம்மன் தேர் வீதியுலாவும் நாளை 6ந் தேதி (செவ்வாய்கிழமை) 3ம் நாள் பகல் 1 மணிக்கு மாரியம்மனுக்கு கூழ்ஊற்றல் நிகழ்வும் இரவு பிடாரி காளியம்மன் தேர் வீதியுலாவும், வானவேடிக்கை மற்றும் நாடகமும் நடைபெறவுள்ளது. 7ந் தேதி (புதன்கிழமை) 4ம் நாள் காலை 10 மணிக்கு தேர் வீதியுலாவும் மஞ்சள் நீர் விளையாட்டும் நடைபெறவுள்ளது.

இதில் ஆன்மீக முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தண்டராம்பட்டு ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.பாரதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலாபாரதி மற்றும் வரகூர் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து