முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் தூர்வாரும் பணி செய்தியாளர்களுடன் சென்று கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் வட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் தூர்வாரும் பணியினை செய்தியாளர்கள் பயணத்தின்போது கலெக்டர் டி.பி.ராஜேஷ்,பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 தூர்வாரும் பணி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாய நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களின் தேவைக்காகவும், மண்பாண்ட தொழிலுக்கும் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை எடுத்துச் செல்லலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.75 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 160 ஏரிகளில் பணிகள் நடைபெற்று 1 இலட்சம் கன மீட்டர் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள 3200 நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்பாடு

கடந்த 27.05.2017 அன்று  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களால் பெருமாள் ஏரியில் விவசாய நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களின் தேவைக்காகவும், மண்பாண்ட தொழிலுக்கும் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளின் கீழ் வண்டல் மண் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு அளிப்பதால் மகசூலினை அதிகரிக்கச் செய்யமுடியும். இத்திட்டத்தின் கீழ் எளிமையான முறையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மண்பாண்ட தொழில் செய்வோர் ஆகியோர் வண்டல் மண், மண் மற்றும் கணிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டல் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம். அதனடிப்படையில்  இன்றைய தினம் கடலூர் வட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் தூர்வாரும் பணியினை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   பார்வையிட்டு ஆய்வு செய்தார். எனவே, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச்சென்று பயன்பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குர்ஷித்பேகம் (வ.ஊ), சரவணன் (கி.ஊ), விவசாய பெருமக்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து