ஈரோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 6 வீடுகள் அகற்றம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      ஈரோடு

ஈரோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 6 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஓம்காளியம்மன் கோயில் உள்ளது.

வீடுகள் அகற்றம்

இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கடந்த 30 ஆண்டுகளாக ஒரு சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனர்.  இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என இந்து அறநிலையத் துறை வலியுறுத்தியும் அகற்றப்படாததால், அத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி  நடைபெற்றது.

இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் முருகையா, ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், வட்டாட்சியர் ஜெயகுமார்,  நெடுஞ்சாலைத் துறை உதவி ஆணையர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து