முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவ்வாதுமலையில் 2 நாட்கள் கோடை விழா சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு: ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தகவல்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் கோடை விழாவின் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாராசெய்லிங் என்ற சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோடை விழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். ஜவ்வாதுமலை கோடை விழா நாளை 17ந் தேதி மறுநாள் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான கோடை விழாவை மிக சிறப்பாக நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன.

கோடை விழா

கோடை விழா நடைபெறவுள்ள அரங்கம், ஏரி, வனத்துறை பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி, ஆகிய பகுதிகளில் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இந்த ஆண்டு கோடை விழாவின் சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம் செல்லும் சாலையில் பாராசெய்லிங் என்ற சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். கோடை விழா நடைபெறும் 2 நாட்களும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பாராசெய்லிங் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதேபோல் 3டி நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கான பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன. ஜமுனாமரத்தூர் ஏரிப்பகுதியில் மாலை 7 மணிமுதல் இரவு 8 மணிவரை கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. ஜவ்வாதுமலை கோடை விழாவுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி திருவண்ணாமலையிலிருந்து ஜமுனாமரத்தூருக்கு காலை 4.45, 6.25, 6.55, 7.22, 11.20, 1.05 மற்றும் 2.50 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போளூரிலிருந்து காலை 4.15, 5.00, 5.45, 7.10 , 7.30, 7.50, 8.10, 9.10, 12.30, 1.15, 1.30, 1.45, 2.30, 3.50, மாலை 5.50, 6.10, 6.15, 6.40, 7.00 , 8.25 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஆலங்காயத்தலிருந்து ஜமுனாமரத்தூருக்கு காலை 5.25, 7.20, 9.30, 10.45, 2.20, 2.50, மாலை 5.15, 6.00, 7.25, 9.25 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். அங்கிருந்து ஆலங்காயத்திற்கு காலை 5.40, 8.05, 9.05, 10.51, 12.05, 3.45, மாலை 6.20, 7.45, 8.20, 8.30 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஜமுனாமரத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு காலை 4.25, 8.15, 10.00 மணி, 10.20, மாலை 6.10, 8.20, 9.30, மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஜமுனாமரத்தூரிலிருந்து போளூருக்கு காலை 4.25, 7.15, 8.15, 9.35, 10.00, 10.20, 11.00, 11.30, 3.20, 3.55, மாலை 4.00, 4.15, 5.00, 6.10, 7.50, 8.20, 8.30, 8.45, இரவு 9.15, 9.30 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் ஜமுனாமரத்தூரிலிருந்து அமிர்தி வழியாக வேலூருக்கு காலை 6.00, மற்றும் பகல் 2.55 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து