கடலூர் மாவட்டத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் டி.பி.ராஜேஷ் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      கடலூர்
cud collector

கடலூர் டவுன்ஹால் எதிரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்வில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட தன்னார்வ இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் டி.பி.ராஜேஷ், ,  கொடியசைத்து துவக்கிவைத்தார்.

 முதலிடம்

 கலெக்டர் டி.பி.ராஜேஷ், ,  பேசுகையில், தொடர் இரத்த கொடையாளர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும், மேலும் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தின் இவ்வாண்டுக்குரிய மையக்கருத்தான “இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள்”  என்பதை இரத்த  கொடையாளர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். நமது மாவட்டத்தில் சென்ற வருடம் 98 இரத்த தானம் முகாம்கள் நடத்தப்பட்டது. 4,482 இரத்த னிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 227 இரத்த  னிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும், ஆக மொத்தம் 4,709 இரத்த னிட்டுகள் இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்ததான முகாமின் மூலம் பெறப்பட்டது. 7,672 இரத்தயூனிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 154 இரத்தயூனிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும் ஆக மொத்தம் 7,826 இரத்த னிட்டுகள் தொடர் இரத்த தான கொடையாளர்களிடமிருந்து மருத்துவமனை மூலம் பெறப்பட்டது ஆக 12,535 இரத்த னிட்டுகள் தொடர் தன்னார்வ இரத்ததான கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டன.

பேரணி

இரத்தான விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரிலிருந்து துவக்கி வைக்கபட்டு அரசு தலைமை பொது மருத்துவமனை வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய  மாணவிகளும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் பணியாளர்கள் கலந்துக் கொண்டு, இரத்த தானம் பற்றிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையிலேந்தி வண்ணம் முழக்கமிட்டு சென்றனர். இவ்விழிப்புணர்வு  பேரணியின் பதாகைகளின் வாசகங்கள் “செய்வோம் செய்வோம் இரத்தானம் செய்வோம்” “கொடுப்போம் கொடுப்போம் இன்னுயிர் காக்க இரத்தானம் கொடுப்போம்”“இருக்கும் வரை இரத்தானம், இறந்த பின் கண் தானம்”“ உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் ”“தானத்தில் சிறந்தது இரத்த தானம்” “இரத்த தானம் செய்யுங்க ர்நுசுழு ஆயிடுங்க”“ வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை இரத்த தானம் செய்வோம் ”“ மனித நேயத்தை இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்” போன்ற பதாகைகளை கையிலேந்தி வண்ணம் பொது மக்களிடையே இரத்தான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மரு. ளு. மாதவி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் (ம) துணை இயக்குநர் சுகாதார பணிகள்  மரு. கே. ஆர். ஜவகர்லால்,  துணை இயக்குநர், காசநோய் பிரிவு மரு. க.கருணாகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு. அ.சண்முகக்கனி, கண்காணிப்பாளர் மரு. N. ஹாபிசா, ஏர்ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவ அலுவலர் மரு. பு.தேவனந்த், கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர்  மு. நாகராஜன், கடலூர். அரசு தலைமை மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. சாய்லீலா, கடலூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்  ர.சண்முகம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.திருநாவுகரசு, சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. இராஜேந்திரன், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி என்.சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரிதிநிதிகள், தொடர் இரத்த கொடையாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து