முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 நபர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

 மனு மீது நடவடிக்கை

இக்கூட்டத்தில் கலெக்டர் கலெக்டர் என்.வெங்கடேஷ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், கல்விக்கடன், தொழிற்கடன், சுயஉதவிக்குழுக்கான கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்று அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் வேடநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வேடநத்தம் ஊராட்சி அளவிலான 2 விண்மீன் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், பசுமை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.20 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.4800/= மதிப்பலான விலையில்லா தையல் இயந்திரத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பணியில் இருக்கும் பொழுது மரணமடைந்த அரசு பணியாளர்கள்/அரசு அலுவலர்களின் வாரிசுதாரர்களான வே.முருகன் தேசிங்குராஜன்,பா.இசக்கிராஜா,ச.சக்திஉடையார் ஆகிய 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் மீன்வளத்துறையில் மீன்வள மேற்பார்வையாளர் தரம்-2 என்ற பதவிக்கான பணி நியமன ஆணையினை கலெக்டர் கலெக்டர் என்.வெங்கடேஷ வழங்கினார்கள்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.இராஜையா, திட்ட அலுவலர், புதுவாழ்வு திட்டம் கர்ணன், இணை இயக்குநர் (மீன்வளத்துறை) ரீனாசெல்வி, உதவி இயக்குநர்கள் கணேஷ்நேரு, பாலசரஸ்வதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பி.சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து