ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் புதுவையில் எம்எல்ஏக்களுடன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      புதுச்சேரி
meerakumar meet 2017 07 02

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 17-ந் தேதி நடக்கின்றது.

 சுற்றுப்பயணம்

இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். ‘எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகின்றார்.இரு வேட்பாளர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர். சென்னைக்கு வந்த மீராகுமார் அங்கு காங்கிலஸ்திமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம்அவர் புதுவை வந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு வந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர். மீராகுமாருடன் காங்கிரஸ் மேலிட தலைவர் முகுல்வாஸ்னிக், தமிழிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் வந்தனர்.


வேண்டுகோள்

ஓட்டலுக்கு வந்த மீராகுமார் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் எம்எல்ஏக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி மாநாட்டு அறையில் நடந்தது. புதுவையில் உள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 30. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான திமுகவிற்கு 2 பேரும் உள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் மீராகுமார் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு ஒட்டளிப்பதாக உறுதி அளித்தனர். எம்எல்ஏக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீராகுமார் சென்னை புறபபட்டு சென்றார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய மீராகுமார் அவர்களிடம் கூறியதாவது:-அமைதியை நிலை நாட்டும் புதுவையில் தனி நபருக்கு எப்போதும் மரியாதை உண்டு. 17 முக்கிய கட்சிகளால் சோனியா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை தேர்வு செய்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். எனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்ககள் மற்றும் எம்பிக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை ரீதியில் நான் பலமான இடத்தில் இருக்கிறேன் என்றார்.  மீராகுமார் வருகையை யொட்டி அவர் வரும் பாதையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஓட்டலிலும் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஓட்டலுக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்ப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து