முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கலெக்டர் வெங்கடாசலம், பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழக அரசு தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவியர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், விளையாட்டு வீரர், வீராங்கனையர்களை ஊக்கப்படுத்திடவும் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாடுவதினால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் புத்துணர்ச்சியுடன் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட விளையாட்டு முக்கிய பங்காகிறது. மாணவ, மாணவியர்கள்  கல்வியுடன் கூடிய விளையாட்டின் மூலமே ஒரே சிந்தனையுடன், மன நிலையை ஒருங்கிணைப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற முடியும்.
மாணவ, மாணவியர்கள் விடாமுயற்சி, நல்லதொரு வாய்ப்புகளை பயன்படுத்தி கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்தவர்களாக விளங்கிட வேண்டும். தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக எண்ணற்ற பல நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்திலுள்ள 3 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும்,    400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு  100 மீ, 200 மீ, 400 மீ, குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும்  4 ஓ 100 மீ தொடர் ஓட்டம் - தடகள போட்டிகள், கபாடி, கோ-கோ - குழுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்  சுப்புராஜ் அவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  தி.கிருஷ்ணவேணி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து