முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 25 - ம் தேதி தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 25 - ம் தேதி தொடங்குகிறது.
          ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாய பெருமக்கள் ஆடிமாதத்தில் விதைவிதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். அவர்கள் விளைநிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் 4 ஆகும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலைவிழா, மார்கழி எண்ணை காப்பு திருவிழா ஆகியவை ஆகும்.
                இதில் ஆடிமுளைக்கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு 10 நாட்கள் (25-7-17 முதல் 3-8-17 வரை) திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். 7 - ம் திருநாள் அன்று (31 - ந்தேதி ) இரவு வீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.
      திருவிழாவையொட்டி 24 - ந்தேதி முதல் 4 - ந்தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் உபயதிருக்கல்யாணம், தங்கத்தேர் இழுத்தல் போன்றவை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து