சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் சு.மலர்விழி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

siva news

   சிவகங்கை.- சிவகங்கை பெமினா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் சார்பாக மூன்றாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
               இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பரமக்குடி சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 88 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் 12,535 நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். இச்சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலை இரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி இரகங்களின் பராம்பரியம், தொன்மை, தனித்தன்மை மற்றும் சிறப்பு ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நுகர்வோர்களிடையே வெகுவாக விளம்பரப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் (09.08.2017) இன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி வரும் 09.08.2017 முதல் 11.08.2017 வரை “சிவகங்கையில் உள்ள பெமினா மஹால், சத்;தியமூர்த்தி தெரு, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, எதிரில்” நடைபெற உள்ளது.
             இச்சிறப்பு கைத்தறி கண்காட்சியில் பரமக்குடி சரக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள், செயற்கைபட்டுச் சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், காட்டன் சில்க் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைத்தறி துணிகள் விற்பனைக்கு உள்ளன. குறிப்பாக, பரமக்குடியிலிருந்து காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலை ரகங்களும், நாகர்கோவில் வேட்டி, கடலூர் குறிஞ்சிப்பாடி கைலி ரகங்களும் கண்காட்சி விற்பனைக்கு உள்ளன. இந்த கண்காட்சியில் விற்பனைக் குறியீடாக ரூ.20.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20மூ அல்லது ரூ.100ஃ- வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கைத்தறி துணிகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமென கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் திரு.சம்பத், அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து