முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு கணவாய்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டு கணவாய்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி ஏற்பு கிராம ஊராட்சி ஆணையாளர் விஜயசந்திரிகா தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம ஊராட்சி ஆணையாளர் விஜயசந்திரிகா தலைமை தாங்கினார். கணவாய்பட்டி ஊராட்சி செயலர் செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார். அதன் பின்பு  இன்று முதல் மகாத்மாகாந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுத்தமான சுகாதாரமான புதிய பாரத்தை உருவாக்க கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் சுகாதார நிலையங்கள் தொடர்வண்டி நிலையங்கள் பேருந்து நிலையங்கள் நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மைக் கடைபிடிப்போம். வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன் அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச் செய்து திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும் நகரங்களும் உருவாக்க பாடுபடுவோம், கழிப்பறை பயன்படுத்துவதுடன் கை கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம். குறைத்தல் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து