முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      வேலூர்

 

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு, சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சார்பு நீதிபதி எழில்வேலவன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த சட்ட முகாமில் ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.

விழிப்புணர்வு முகாம்

அப்போது அவர், தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தெரு விளக்கு மற்றும் வடிகால்கள் அமைக்க வேண்டும். திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று பேசினார். மேலும், திருமணச் சட்டம், ஜீவனாம்சம் குறித்த பல்வேறு சட்டம் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆரணி கிழக்கு) மல்லிகா, ஊராட்சி செயலர் சுரேஷ், வழக்குரைஞர்கள் சிகாமணி, செந்தில், சுகுமாறன், சண்முகம், பிரகாஷ், ராமு, ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து