தருமபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வருகிற நாளை நடக்கிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      தர்மபுரி

 

எம்ஜிஆர் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது. அவருடைய வழியை பின்பற்றி புரட்சித் தலைவி அம்மா ஏழை, ஏளிய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தார்கள்.

நூற்றாண்டு விழா

 

எம்.ஜி.ஆர் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவரை பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன் தொடக்கவிழா கடந்த 30.06.2017 அன்று மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 22.07.2017 அன்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 29.07.2017 அன்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் 05.08.2017 அன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்றும், கடலூர் மாவட்டத்தில் 16.08.2017 அன்றும், திருவாரூர் மாவட்டத்தில் 19.08.2017 அன்றும், அரியலூர் மாவட்டத்தில் 23.08.2017 அன்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30.08.2017 அன்றும், திருவள்ளுர் மாவட்டத்தில் 03.09.2017 அன்றும், ஈரோடு மாவட்டத்தில் 06.09.2017 அன்றும் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 09.09.2017 அன்றும், 17.09.2017 அன்று நாமக்கல் மாவட்டத்திலும், 20.09.2017 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும், 23.09.2017 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், 30.09.2017 அன்று சேலம் மாவட்டத்திலும், 04.10.2017 அன்று கரூர் மாவட்டத்திலும் என 17 மாவட்டங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்தும், அரசின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் மாவட்டங்களில், எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நாளை (சனிக்கிழமை) அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.1044.87 கோடி மதிப்பிலான 33 புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், ரூ.29.44 கோடி மதிப்பிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், 25,096 - பயனாளிகளுக்கு ரூ.182 கோடியே 99 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்கள்.

துணை முதல்வர்

 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும் உள்ளார்கள். மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார்கள். மேலும் உயர்;கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி மற்றும் வாரியத் தலைவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிப்பார்கள்.

பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை புரட்சித் தலைவர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி கலெக்டர் கே.விவேகானந்தன், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து