காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஆணையாளர் விசுவநாதன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      சென்னை

 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல்துறை மற்றும் ராஜன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில், காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டு கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், எச்.எம்.ஜெயராம்(வடக்கு), எம்.சி.சாரங்கன்(தெற்கு), கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் எஸ்.மனோகரன்காவல் துணை ஆணையர்கள் பிரவேஷ்குமார்(திருவல்லிக்கேணி), எஸ்.சரவணன் (தலைமையிடம்), கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), ஆர்.ரவிச்சந்திரன் (மோட்டார் வாகனப்பிரிவு ஆகியோர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து