முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிப் பகுதி மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு வி.ஜி.பி. நகர், கே.கே.நகர், சாலாமேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர்  பார்வையிட்டார்.  இந்த ஆய்வின்போது, சிமெண்ட் கலவை கலக்கும் இயந்திரத்தில் கொசு புழுக்கள் இருப்பதை பார்வையிட்ட கலெக்டர் , இயந்திரத்தை கைப்பற்றவும், ரூ.10,000- அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.  மேலும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டும் தேநீர் கடைகள் மற்றும் வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கவும், மீறினால் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் கயத்தூர், பனையபுரம், பாப்பணப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கயத்தூர் ஊராட்சியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து பழைய டிராக்டர் டயர்களில் நீர் தேங்கி, அதிக கொசுப்புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததனால், அதன் உரிமையாளருக்கு ரூ.10,000- அபராதம் விதிக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மைய குழாயிலிருந்து, அனுமதியின்றி இணைப்பு செய்து பயன்படுத்திய 3 மின் மோட்டார்களை கைப்பற்றவும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.  ஊராட்சிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும், நீர் தேங்காமல் கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.  மேலும், டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நீர் தேங்காமலும் பார்த்துக் கொண்டாலே டெங்குவை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வி.மகேந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனுவாசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தர்ராஜன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் செந்திவேல், நகர மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, முபாரக் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து